பக்கங்கள்

Wednesday, December 7, 2011

பள்ளிகள் தரம் உயர்வு-புதிய ஆசிரியர் பணியிடம் தோற்றுவிப்பு:-அரசு அறிவிப்பு

பள்ளிகள் தரம் உயர்வு-புதிய ஆசிரியர் பணியிடம் தோற்றுவிப்பு:-அரசு அறிவிப்பு

வெள்ளத்தினால் அடித்துச் செல்ல முடியாத, வெந்தணலால் வேகாத, கள்வரால் கவர முடியாத,
வேந்தரால் கொள்ள முடியாத, அழியாச் செல்வமாம் கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும்
அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா
அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் குறிப்பாக, ஏழை
எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு
ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, மதிய உணவு வழங்குவது; கல்வியினை
இடையே விட்டு செல்லாமல் இருப்பதற்காக உதவித் தொகை வழங்குவது; மிதிவண்டி வழங்குவது;
மடிக்கணினி வழங்குவது; போன்ற எண்ணற்ற
நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களின்
நலனுக்காகவும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக அமையும் வண்ணம் அவர்கள் வசிக்கும்
இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், 710 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப்பள்ளிகளை 6
முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக
2011-12-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தவும், அப்பள்ளிகள் 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்டு
2011-12 ஆம் ஆண்டிலேயே முழுமையாக செயல்படவும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் 710 அரசு/ மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள்
ஒவ்வொன்றிற்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,
பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்,
பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள்
ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள். இதற்காக ஆண்டு
ஒன்றுக்கு 113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு
தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதியதாக வகுப்பறைகள், அலுவலக
வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள்
சார்ந்த செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ 58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு 412
கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்து மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதுமட்டுமல்லாமல், 5 கீ.மீ. சுற்றளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத
குடியிருப்புகள்/நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும்
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8 ஆம் வகுப்பில் ஊட்டுப் பள்ளி மாணவர்
எண்ணிக்கையுடன் 70 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள்,
போக்குவரத்து வசதியற்ற, இயற்கை/செயற்கை தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப்
பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதேபோன்று 2009-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கும்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்களாக தரம் உயர்த்தவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.அனைவருக்கும்
கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில்
பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,உயர்நிலைப் பள்ளி மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக
மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு
ஏற்படும்.

இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய்
செலவாகும். மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம்
6,428 கூடுதல் பணியிடங்களை
தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும்.

மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி,65 தொடக்கப் பள்ளிகளை
நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு
பள்ளிக்கும் 3 பணியிடங்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா
அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 71 லட்சத்து 63
ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
பள்ளிக்கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில்
படிக்கும் மாணவ மாணவியர்கள் எந்தவிதச் சிரமுமின்றி கல்வி பயில வழி வகுக்கும்.

Tuesday, November 29, 2011

முதுகலை ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு-அரசாணை



சுருக்கம்

பள்ளிக் கல்வி – முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி(க்யு)த் துறை அரசாணை (நிலை) எண்.175 நாள் 08.11.2011

படிக்க:-

அரசாணை(நிலை) எண்.290, பள்ளிக் கல்வித் (க்யு) துறை, நாள் 06.12.2007.
----
ஆணை :-
  • மேலே படிக்கப்பட்ட அரசாணையில், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகப் பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் அதே முறையைப் பின்பற்றி முதுகலைஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யும் போதுவேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்து நியமிக்க அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
  •  வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர் நியமனம்செய்யும் முறை குறித்து  அரசு கவனமுடன் பரிசீலித்தது. முதுகலை ஆசிரியர்கள் நியமனம் எழுத்துத் தேர்வு (Written Examination) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக மேற்கொள்ளலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

---------------------------------------------

இவ்வாறு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

Wednesday, November 23, 2011

ஆசிரியர் தகுதித் தேர்வு:-தமிழக அரசு ஆணை

  • இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் நெறிமுறைகள் குறித்த விரிவான அரசாணை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • முழுமையான தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்

Saturday, November 19, 2011

அரசு பள்ளி காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்க விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
  • சட்டப்பேரவையில் அறிவித்த 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு வரை பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் 9,735 என மொத்தம் 15,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3,187 பேர் நியமிக்கப்படுகின்றனர்.
  • பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர் நியமிக்கப்படுகின்றனர்.
  • தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களில் 3,565 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  • 5,000 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 544 ஆய்வக உதவியாளர்கள், 344 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • நடுநிலைப் பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
  • ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதுநிலை விரைவுரையாளர்கள் 34 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.
  • விரைவில் இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

Thursday, November 17, 2011

திருச்சி மாவட்டத்திற்கான தொடக்கக் கல்வி இயக்கக பொது மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி இயக்கக செய்திக்குறிப்பு

சட்டசபை இடை தேர்தல் 2011 காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2011 ஆம் ஆண்டிற்குரிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு கீழ்க்குறித்துள்ள நாட்களில் (இணைப்பு-1) அந்தந்த மாவட்டத்தில் குறித்துள்ள மையங்களில் (இணைப்பு-2) நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி பதவி உயர்வுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்விலும் கலந்துகொண்டு தாங்கள் விரும்பும் இடத்தை தெரிவு செய்திடலாம் என்றும் அவர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு - 1
நாள் காலம் நிகழ்ச்சி நிரல்
17.11.2011
முற்பகல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8
வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப் படாத
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல்

பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் மாறுதல் ஒன்றியத்திற்குள் மற்றும் பதவி உயர்வு

17.11.2011
பிற்பகல்
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளியில் 6,7,8
வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப் படாத
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை
ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வு (அரசாணை
எண்.131, பத்தி 8 (i)ன்படி
18.11.2011
முற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல்

இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
18.11.2011
பிற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


இணைப்பு.2
வ.எண் மாவட்டத்தின் பெயர் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள்

திருச்சி ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளி, டோல்கேட், திருச்சி - 20

  • எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 19.11.2011 அன்று காலை 9.30 மணியளவில் அனைத்து உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு பொது மாறுதல் நடைபெறவுள்ளது.