சட்டசபை இடை தேர்தல் 2011 காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2011 ஆம் ஆண்டிற்குரிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு கீழ்க்குறித்துள்ள நாட்களில் (இணைப்பு-1) அந்தந்த மாவட்டத்தில் குறித்துள்ள மையங்களில் (இணைப்பு-2) நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பெயர் பட்டியலின்படி பதவி உயர்வுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்விலும் கலந்துகொண்டு தாங்கள் விரும்பும் இடத்தை தெரிவு செய்திடலாம் என்றும் அவர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - 1
| நாள் | காலம் | நிகழ்ச்சி நிரல் |
| 17.11.2011 | முற்பகல் | நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப் படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் மாறுதல் ஒன்றியத்திற்குள் மற்றும் பதவி உயர்வு |
| 17.11.2011 | பிற்பகல் | தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளியில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப் படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வு (அரசாணை எண்.131, பத்தி 8 (i)ன்படி |
| 18.11.2011 | முற்பகல் | இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் |
| 18.11.2011 | பிற்பகல் | இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் |
இணைப்பு.2
| வ.எண் | மாவட்டத்தின் பெயர் | கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் |
| திருச்சி | ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளி, டோல்கேட், திருச்சி - 20 |
- எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 19.11.2011 அன்று காலை 9.30 மணியளவில் அனைத்து உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு பொது மாறுதல் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment